ஈரோடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு: கத்தரிக்காய் கிலோ ரூ.120-க்கு விற்பனை


ஈரோடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு: கத்தரிக்காய் கிலோ ரூ.120-க்கு விற்பனை
x
தினத்தந்தி 20 Nov 2021 2:43 AM IST (Updated: 20 Nov 2021 2:43 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு காரணமாக கத்தரிக்காய் கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் காய்கறிகள் விளைச்சல் குறைந்து விட்டது. இதன் காரணமாக ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்தது. இதனால் படிப்படியாக விலை உயர்ந்து வருகிறது. அதன்படி கடந்த 13-ந்தேதி ரூ.80-க்கு விற்பனையான ஒரு கிலோ தக்காளி ரூ.20 விலை உயர்ந்து நேற்று ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ரூ.80-க்கு விற்பனையான கத்தரிக்காய் ரூ.120-க்கும், ரூ.70-க்கு விற்பனையான வெண்டைக்காய் ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் நேற்று விற்பனையான காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-
தக்காளி-ரூ.100, கத்தரிக்காய் - ரூ.120, வெண்டைக்காய் - ரூ.70, பீர்க்கங்காய் - ரூ.60, புடலங்காய் - ரூ.60, முள்ளங்கி - ரூ.50, கேரட் - ரூ.60, பீட்ரூட் -ரூ.40, கருப்பு அவரைக்காய் - ரூ.130, பெல்ட் அவரைக்காய் - ரூ.100, முருங்கைக்காய் - ரூ.150, பச்சை மிளகாய் - ரூ.40, காலிபிளவர் - ரூ.60, உருளைக்கிழங்கு - ரூ.40. வாழைக்காய் ஒன்று ரூ.5-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Next Story