கல்லூரி மாணவருடன் 40 வயது பெண் ஓட்டம்


கல்லூரி மாணவருடன் 40 வயது பெண்  ஓட்டம்
x
தினத்தந்தி 20 Nov 2021 10:59 PM IST (Updated: 20 Nov 2021 10:59 PM IST)
t-max-icont-min-icon

கல்லூரி மாணவருடன் 40 வயது பெண் ஓட்டம்

இடிகரை
பெரியநாயக்கன்பாளையத்தில் கள்ளக்காதல் கண்ணை மறைத்ததால் 40 வயது பெண், கல்லூரி மாணவருடன் ஓட்டம் பிடித்தார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கள்ளக்காதல்

கோவை பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 40 வயது பெண்ணுக்கு திருமணம் முடிந்து, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவருடைய கணவர் கூலி தொழிலாளியாக உள்ளார். இந்த நிலையில் 40 வயது பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. 

இதையடுத்து அவர்கள் 2 பேரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டனர். தொடர்ந்து செல்போனில் பேசி வந்தனர். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கணவர் வேலை க்கு சென்றதும், அந்த பெண் கல்லூரி மாணவரை வீட்டிற்கு அழைத்து அவருடன் உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

கல்லூரி மாணவருடன் ஓட்டம்

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் மூலமாக கணவருக்கு தெரியவந்தது.
 இதையடுத்து தனது மனைவியை, கூலி தொழிலாளி கண்டித்துள்ளார். மேலும் கள்ளக்காதலை கைவிடுமாறு அறிவுரை கூறியுள்ளார். ஆனால் அந்த பெண் தொடர்ந்து கல்லூரி மாணவருடன் உல்லாசமாக இருந்து வந்தார்.

 இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 
இந்த நிலையில் 40 வயது பெண் திடீரென வீட்டில் இருந்து மாயமானார். இதேபோல கல்லூரி மாணவரும் மாயமானது தெரியவந்தது. விசாரித்ததில், கள்ளக்காதல் கண்ணை மறைத்ததால் 40 வயது பெண், கல்லூரி மாணவருடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. 

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணின் கணவர் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, கல்லூரி மாணவனுடன் ஓட்டம் பிடித்த 40 வயது பெண்ணை தேடி வருகின்றனர்.

Next Story