சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 100 நாள் வேலை பயனாளிகளுக்கு தடுப்பூசி


சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 100 நாள் வேலை பயனாளிகளுக்கு தடுப்பூசி
x
தினத்தந்தி 20 Nov 2021 10:59 PM IST (Updated: 20 Nov 2021 10:59 PM IST)
t-max-icont-min-icon

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 100 நாள் வேலை பயனாளிகளுக்கு தடுப்பூசி

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் கொரானா பரவல் தடுப்பு பணியில் வட்டார சுகாதாரத்துறையினர், ஒன்றிய நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் ஆகியவை தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக ஆங்காங்கே முகாம்கள் அமைத்தும், தொழிற்சாலை, வீடு, வீடாக நேரடியாக சென்றும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. 

இதன்படி சுமார் 64 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒன்றியத்தில் இருந்து கொரோனாவை முற்றிலும் ஒழிக்கும் வகையில், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி புரிந்து வருபவர்களுக்கு அவர்கள் வேலை செய்யும் இடங்களுக்கே நேரடியாக சென்று தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.

 இதன்படி, கிருஷ்ணாபுரம், வதம்பச்சேரி பாப்பம்பட்டி, கம்மாளப்பட்டி, இடையர்பாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வேலை பார்த்து வரும் பயனாளிகள் 200 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்த பணியில் டாக்டர்கள் சபரி ராம், சுந்தர், சூர்யா, பரத்குமார், ஹரிஷ் சந்தோஷ் லேனா மற்றும் செவிலியர்கள் உள்பட பலர் ஈடுபட்டனர். 

இதற்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வனிதா, சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் செய்து இருந்தனர்.
1 More update

Next Story