மாணவி தற்கொலை விவகாரத்தில் பள்ளி முதல்வரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு
மாணவி தற்கொலை விவகாரத்தில் பள்ளி முதல்வரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு
கோவை
கோவையை சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவி ஒருவர் ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக கடந்த 11-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கோவை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை (வயது 32) கைது செய்தனர்.
மாணவி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தனியார் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் அவர்கள் 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தனியார் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று நீதிபதி நந்தினி தேவி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமீன் மனுவை வருகிற 24-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story