கிணற்றில் தவறி விழுந்த கல்லூரி மாணவி சாவு
கிணற்றில் தவறி விழுந்த கல்லூரி மாணவி சாவு
பேரூர்
கோவையை அடுத்த பேரூர் செம்மேடு கோட்டைக்காடு சென்னி யாண்டவர் வீதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 47). விவசாயி. இவரது மகள் நிவேதா (22). நிவேதா, கோவைப்புதூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.ஏ ஆங்கில இலக்கியம் முதலாமாண்டு படித்து வந்துள்ளார்.
மேலும், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு, சரவணம்பட்டி அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை இவரது வீட்டில் இருந்து சுமார் 50 அடி தூரத்திலுள்ள 100 அடி ஆழமுள்ள 70 அடி தண்ணீர் கொண்ட கிணற்றருகே நிவேதா சென்றதாக தெரிகிறது.
அதில் தவறி விழுந்துள்ளார். இதனை அவரது வீட்டு நாய் பார்த்து குரைத்துள்ளார். நாய் குரைக்கும் சத்தம் கேட்டு, அங்கு வந்த பக்கத்து தோட்டத்தைச் சேர்ந்த நிதிஷ்குமார் என்பவர் கிணற்றுக்குள் குதித்து அவரை மீட்டார். பின்னர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், நிவேதா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story