கோவையில் 125 பேருக்கு கொரோனா
கோவையில் 125 பேருக்கு கொரோனா
கோவை
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் நேற்று உயர தொடங்கியது. 125 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 49 ஆயிரத்து 20 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று உயிரிழப்பு இல்லை. கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,445ஆக உள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 102 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.
கோவையில் இதுவரை 2 லட்சத்து 45 ஆயிரத்து 371 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 1204 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Related Tags :
Next Story