நடிகர் சூர்யா மீது பா.ம.க.வினர் போலீசில் புகார்
நடிகர் சூர்யா மீது பா.ம.க.வினர் போலீசில் புகார்
மேட்டுப்பாளையம்
கோவை வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநில துணைத்தலைவர் மின்னல் சிராஜ் தலைமையில் மாநில அமைப்பு துணைச்செயலாளர் தங்கராஜ் முன்னிலையில் கட்சியினர் மேட்டுப்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து புகார் அளித்தனர்.
அதில், ஜெய்பீம் திரைப்படம் எங்கள் மன உணர்வுகளை புண்படுத்துவதாகவும், கட்சி மற்றும் வன்னியர் இனம் சார்ந்த வெறுப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் தூண்டுவதாகவும் உள்ளது.
எனவே திரைப்படத்தில் நடித்த நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story