மாவட்ட செய்திகள்

கணவன், மனைவிக்கு கத்திக்குத்து + "||" + Husband wife screaming

கணவன், மனைவிக்கு கத்திக்குத்து

கணவன், மனைவிக்கு கத்திக்குத்து
கச்சிராயப்பாளையம் அருகே கணவன், மனைவிக்கு கத்திக்குத்து விழுந்தது.
கச்சிராயப்பாளையம், 

கச்சிராயப்பாளையம் அருகே உள்ள எடுத்தவாய்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர்  பரத். இவரது மனைவி அருணாதேவி(வயது 27). இவர், தனது கணவரை விட்டு பிரிந்து மாதவச்சேரி கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். அருணாதேவிக்கும், சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த செல்வக்குமார்(30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அருணாதேவிக்கும், செல்வக்குமாருக்கும் தகராறு ஏற்பட்டது. இதை பக்கத்து வீட்டில் வசித்து வரும் மருதமுத்து(48), இவரது மனைவி ரம்யா(24) ஆகியோர் தட்டிக்கேட்டனர். இதில் ஆத்திரமடைந்த செல்வக்குமார், இருவரையும் கத்தியால் குத்தினார். இடுப்பில் காயமடைந்த மருதமுத்துவைவும், ரம்யாவைவும் அக்கம்பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு தலைமறைவான செல்வக்குமாரை் வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பிளவுஸ் தைக்க மறுத்த கணவன்.. தற்கொலை செய்துகொண்ட மனைவி...!
கதவை திறந்து பார்த்தபோது வீட்டின் படுக்கை அறையில் மனைவி இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
3. சமூக வலைதள காதல்: கணவன்,பிள்ளைகளை உதறிய பெண் - காதலன் ஏற்காததால் தூக்குப்போட்டு தற்கொலை
கணவர், 2 மகள்களை உதறிவிட்டு ராமநாதபுரம் வந்த இளம்பெண்ணை, காதலன் திருமணம் செய்ய மறுத்ததால், அந்த பெண் அரசு ஆஸ்பத்திரியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட விபரீத சம்பவம் நடந்துள்ளது.