மாவட்ட செய்திகள்

விபத்தில் தொழிலாளி சாவு + "||" + Accident

விபத்தில் தொழிலாளி சாவு

விபத்தில் தொழிலாளி சாவு
சேத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து கூலித்தொழிலாளி பலியானார்.
தளவாய்புரம்,

சேத்தூர் அருகே சொக்கநாதன்புத்தூர் கட்டபொம்மன் சிலை தெருவைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (வயது 35). கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விநாயகமூர்த்தி தனது மோட்டார் சைக்கிளில் சிவலிங்கபுரத்திற்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் மோட்டார் சைக்கிளில் சென்றவர் சாலையோரம் சறுக்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் சேத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிேசாதனைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சேத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பால் லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
பால் லாரி- மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதில் வாலிபர் இறந்தார்.
2. பஸ் மோதி இளம்பெண் சாவு
பஸ் மோதி இளம்பெண் சாவு
3. விபத்தில் ஒருவர் பலி
விபத்தில் ஒருவர் பலி
4. வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 பேர் பலி
திருமங்கலம் அருகே வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.
5. கார் மோதி வாலிபர் சாவு
கார் மோதி வாலிபர் சாவு