அரிட்டாபட்டி மலையடிவார கண்மாய், குளங்களில் அரிய வகை மீன்கள்


அரிட்டாபட்டி மலையடிவார கண்மாய், குளங்களில் அரிய வகை மீன்கள்
x
தினத்தந்தி 20 Nov 2021 8:34 PM GMT (Updated: 20 Nov 2021 8:34 PM GMT)

அரிட்டாபட்டி மலையடிவார கண்மாய், குளங்களில் அரிய வகை மீன்கள்-கல்லூரி மாணவர்கள் ஆய்வு

மேலூர்
மேலூர் அருகே மலையடிவாரத்தில் உள்ள அரிட்டாபட்டி பகுதியில் கண்மாய்கள், குளங்களில் அரிய வகை மீன்கள் பல உள்ளன. மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் தலைமையில் மீன் வளர்ப்பு வகுப்பு மாணவர்கள் குழுவினர் அரிட்டாபடியில் மீன்களை ஆய்வு செய்தனர். இவர்களுக்கு மீன் வளர்ப்பு வகுப்பு பயிற்றுனர் ரவிச்சந்திரன் மீன்களை பற்றி விளக்கம் அளித்தார். நாட்டு வகை மீன்கள் வட்டச்சுழிகெண்டை, பாம்புகெண்டை, வெளிச்சி மீன், கெளுத்தி, குறவை, ஆறா, உழுவை, விரால், அயிரை மீன், விலங்கு மீன், மேல்முறிகெண்டை, வலைப்பொடிக்கெண்டை உள்பட 16 வகை மீன்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வளர்ப்பு மீன்களான கட்லா, ரோகு, வாப்புலெட், மெர்கால், சிலேப்பி கெண்டை உள்பட 9 வகை வளர்ப்பு மீன்களையும் அதன் வளர்ப்பு முறை குறித்து பயிற்றுனர் ரவிச்சந்திரன் மாணவர்களுக்கு விளக்கமளித்தார். வாய்க்கால் தண்ணீரில் பானைப்பொறி வைத்து அயிரை மீன்களை பிடிப்பதை மாணவர்கள் ஆர்வத்துடன் செய்து பழகினர்.

Next Story