செய்யூர் அருகே நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது - எம்.எல்.ஏ., அதிகாரிகள் பார்வையிட்டனர்
செய்யூர் அருகே நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் செய்யூர் எம்.எல்.ஏ. பாபு ஆகியோர் பார்வையிட்டனர்.
மதுராந்தகம்,
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகாவுக்கு உள்பட்ட சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம் சூனாம்பேடு, வெள்ள கொண்ட அகரம், விளாம்பட்டு, புதுப்பட்டு, புதுக்குடி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெற்பயிர்கள் நடப்பட்டன. தற்போது பெய்த கனமழை காரணமாக நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளது.
மேலும் ஆற்றங்கரையில் உடைப்பு ஏற்பட்டு ஆற்றுநீர் புகுந்ததால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட வழங்கல் அலுவலர் சீதா, தாசில்தார் வெங்கட்ராமன், செய்யூர் எம்.எல்.ஏ. பாபு ஆகியோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story