கோவையில் தேசிய அளவிலான கார் பந்தயம்


கோவையில் தேசிய அளவிலான கார் பந்தயம்
x
தினத்தந்தி 21 Nov 2021 9:48 PM IST (Updated: 21 Nov 2021 9:48 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் தேசிய அளவிலான கார் பந்தயம்

கோவை

கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான கார் பந்தயத்தில் ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர். 

கார் பந்தயம்

கோவையை அடுத்த செட்டிபாளையம் கரிமோட்டார் ஸ்பீடு வேயில் தேசிய அளவிலான கார்பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயத்தில் திருச்சூர், சென்னை, புனே, டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்பட பல்வேறு நகரங்களை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். 

முதல் நாள் பந்தயத்தில் வீரர்கள் தங்களது கார்களை மின்னல் வேகத்தில் செலுத்தி பார்வையாளர்களை கவர்ந்தனர். தொடர்ந்து  2-வது நாளாக கார் பந்தயம் நடைபெற்றது. 

இதில் ஜே.கே. டயர் பார்முலா எல்.ஜி.பி. 4 பந்தயத்தில் டி.எஸ்.தில்ஜித் 23 நிமிடம் 10 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். டிஜில் ராவ் 23 நிமிடம் 18 வினாடிகளில் கடந்து 2-ம் இடம் பிடித்தார். சந்தீப் குமார் 23 நிமிடம் 19 வினாடிகள் கடந்து 3-ம் இடம் பிடித்தார். 

ஜே.கே.டயர் நோவிஸ் கோப்பைக்கான போட்டியில் பந்தய தூரத்தை ருஹான் ஆல்வா 21 நிமிடங்கள் 8 வினாடிகளில் கடந்து முதல் இடத்தையும், ஜேடன் ஆர்.பரியாட் 21 நிமிடங்கள் 12 வினாடிகளில் கடந்து 2-ம் இடத்தையும், கவுரவ் கோச்சர் 21 நிமிடங்கள் 13 வினாடிகளில் கடந்து 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

மோட்டார் சைக்கிள் சாகசம்

மோட்டார் சைக்கிள்களுக்கு தனியாக பந்தயம் நடத்தப்பட்டது. போட்டியின் போது ஒரு சில மோட்டார் சைக்கிள்கள் விபத்தில் சிக்கி அந்தரத்தில் பறந்தன. போட்டிகளின் நடுவே மோட்டார் சைக்கிள் சாகசங்களும் இடம்பெற்றன. இதில் வீரர்கள் மோட்டார் சைக்கிள்களின் முன் சக்கரங்களை தூக்கியபடி சாகசம் செய்து அசத்தினர்.

ஜே.கே.டயர் ராயல் என்பீல்டு காண்டினென்டல் ஜி.டி.கோப்பை போட்டியில் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த அக்தர் முதல் இடத்தையும், ஆல்வின் சேவியர் 2-ம் இடத்தையும், கோவை வீரர் ராஜ் குமார் 3-ம் இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன.

1 More update

Next Story