5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை


5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
x
தினத்தந்தி 21 Nov 2021 9:51 PM IST (Updated: 21 Nov 2021 9:51 PM IST)
t-max-icont-min-icon

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

கணபதி

கோவை அருகே உள்ள சின்னவேடம்பட்டியை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (வயது 53), மெக்கானிக். இவர் 5 வயது சிறுமிக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து உள்ளார். பின்னர் அவர் அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்து உள்ளார். இதனால் அந்த சிறுமி அழுதபடி வீட்டிற்கு சென்றது. 

உடனே பெற்றோர் விசாரித்தபோது, ஜாகீர் உசேன் தன்னிடம் நடந்து கொண்டதை குறித்து கூறினாள். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி னார்கள். 

அதில் ஜாகீர்உசேன், 5 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியது தெரியவந்தது. இது குழந்தைகள் தொடர்பான பாலியல் தொல்லை என்பதால் இந்த வழக்கு கோவை கிழக்கு மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப் பட்டது. 

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில், ஜாகீர் உசேன், அந்த சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜாகீர் உசேனை கைது செய்தனர். 


Next Story