அரசு பஸ் மீது ஆட்டோ மோதல்; டிரைவர் காயம்
அரசு பஸ் மீது ஆட்டோ மோதல்; டிரைவர் காயம்
ஆனைமலை
ஆனைமலை அருகே உள்ள சமத்தூர் பகுதியில் நேற்று அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சின் பின்னால் வந்த ஆட்டோ, பஸ்சை முந்தி செல்ல முயன்றதாக தெரிகிறது.
இதற்கிடையில், எதிரே லாரி வந்ததால், டிரைவர் ஆட்டோவை இடது புறமாக திருப்பியுள்ளார். இதில் ஆட்டோவின் முன்பகுதி அரசு பஸ்சின் பக்கவாட்டில் மோதியது. மேலும் ஆட்டோ முன்பக்க டயர், பஸ்சின் அடிப்பகுதியில் சிக்கியது.
இந்த விபத்தில் ஆட்டோ டிரைவரின் தலையில் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆட்டோவில் பயணம் செய்த பயணிகளுக்கும், பஸ்சில் பயணம் செய்தவர்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
Related Tags :
Next Story