கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு
கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.100-க்கு விற்பனையானது.
தினசரி சந்தை
கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் தக்காளிகள் கிணத்துக்கடவு-பொள்ளாச்சி ரோட்டில் தினசரி காய்கறி சந்தையில் ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பிற காய்கறிகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது, வடகிழக்கு பருவமழை காரணமாக தக்காளி உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சந்தையில் கடந்த 19-ந் தேதி ஒரு கிலோ தக்காளி ரூ.79-க்கு ஏலம் போனது.
தக்காளி கிலோ ரூ.100-க்கு ஏலம்
இந்த நிலையில் கிணத்துக்கடவு தினசரி சந்தையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு ஏலம் போனது. கடந்த 2 நாட்களில் ஒரு கிலோ தக்காளிக்கு ரூ.21 வரை உயர்ந்துள்ளது. தொடர்ந்து விலை உயர்வு காரணமாக, ஏலம் எடுக்க வந்த வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல கடந்த வாரம் ரூ.100-க்கு விற்பனையான கத்தரிக்காய் நேற்று சற்று விலை குறைந்து ரூ.75-க்கு விற்பனையானது.
மற்ற காய்கறிகளின் விலை விவரம் (ஒரு கிலோவில்) வருமாறு:-
வெண்டைக்காய் -ரூ.55, பச்சை மிளகாய்-ரூ.35, புடலங்காய்- ரூ.30, பாகற்காய்-ரூ.50, சுரைக்காய்- ரூ.35-க்கும் ஏலம் போனது.
விவசாயிகள் மகிழ்ச்சி
தொடர்ந்து காய்கறி விலை உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தினசரி காய்கறி சந்தையில், காய்கறி விலைகள் உயர்ந்ததால் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள சில்லரை காய்கறி கடையில் தக்காளி ஒரு கிலோ ரூ.120 வரையும், கத்தரிக்காய் ரூ.100 வரையும் விற்பனை செய்யப்பட்டது.
Related Tags :
Next Story