தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் மூழ்கி சிறுவன் பலி
அலங்காநல்லூர் அருகே 4 வழிச்சாலை பாலம் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் மூழ்கி சிறுவன் பலியானான்.
அலங்காநல்லூர்,
அலங்காநல்லூர் அருகே 4 வழிச்சாலை பாலம் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் மூழ்கி சிறுவன் பலியானான்.
நீரில் மூழ்கி சிறுவன் பலி
அலங்காநல்லூர் அருகே வலசை, சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் மலைராஜா (வயது 36) விவசாயி. இவரது மகன் சோணை (9). தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.. இந்நிலையில் நேற்று காலையில் வீட்டில் இருந்த அனைவரும் தோட்டத்து வேலைக்கு சென்று விட்டு மதியம் வீடு திரும்பினர். வீட்டிற்கு வந்து பார்த்த போது சிறுவன் சோணையை காணவில்லை. பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடினர். இந்நிலையில் அந்த பகுதியில் நான்கு வழிச்சாலைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சந்தேகத்தின் பேரில் தேடி பார்த்தனர். அப்போது நீரில் மூழ்கி சிறுவன் இறந்தது தெரியவந்தது.
எம்.எல்.ஏ. ஆறுதல்
இதுபற்றி தகவலறிந்து வந்த சோழவந்தான் தொகுதி வெங்கடேசன் எம்.எல்.ஏ., வாடிப்பட்டி தாசில்தார் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். பின்னர் கிராம நிர்வாக அலுவலரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தினர். கடந்த சில ஆண்டுகளாக நான்கு வழிச்சாலை பணிக்கு பாலம் கட்ட தோண்டிய பள்ளத்தில் பணிகள் நடைபெறவில்லை எனவும், தற்போது பெய்த மழைநீர் பள்ளத்தில் நிரம்பி இருந்ததால் அதில் சிறுவன் மூழ்கி இறந்ததாக கூறினர். நான்கு வழி சாலைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிறுவன் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இச்சம்பவம் குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story