62 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


62 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 22 Nov 2021 1:14 AM IST (Updated: 22 Nov 2021 1:14 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் ஒரே நாளில் 62 ஆயிரம் பேருக்கு கொேரானா தடுப்பூசி போடப்பட்டது.

மதுரை, 

மதுரையில் ஒரே நாளில் 62 ஆயிரம் பேருக்கு கொேரானா தடுப்பூசி போடப்பட்டது.

தடுப்பூசி முகாம்

மதுரை மாவட்டத்தில் நேற்று 1,575 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடந்தது. தேர்தல் வாக்குச்சாவடி மையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ஊரக, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பல இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்துவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

62 ஆயிரம் பேருக்கு...

அதன்படி நேற்று சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தினர். இதுபோல், வீடு, வீடாக சென்றும் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்றது. நேற்று ஒரே நாளில் 62 ஆயிரத்து 901 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
நேற்றுடன் மதுரையில் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 22 லட்சத்து 66 ஆயிரத்து 17 ஆக உள்ளது. நேற்றைய நிலவரப்படி 5 லட்சத்து 31 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. மதுரையில் நேற்று 12 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதுபோல், நேற்று 9 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்.

Next Story