தினத்தந்தி புகாா் பெட்டி


தினத்தந்தி புகாா் பெட்டி
x
தினத்தந்தி 21 Nov 2021 8:56 PM GMT (Updated: 21 Nov 2021 8:56 PM GMT)

தினத்தந்தி புகாா் பெட்டி

குப்பை தொட்டி வைக்கப்படுமா? 
அந்தியூரில் இருந்து பவானி செல்லும் ரோட்டில் உள்ள பருவாச்சி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே ரோட்டோரம் குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளன. இதனால் வாகனங்கள் அந்த வழியாக செல்லும்போது குப்பைகள் ரோட்டில் பறந்து அவர்கள் மீது படுகின்றன. அதனால் பொதுமக்கள் நலன் கருதி அப்பகுதியில் குப்பை தொட்டி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருள், பருவாச்சி.


அபாயகரமான குழிகள்              
டி.என்.பாளையம் அருகே உள்ள வாணிப்புத்தூர் பாலம் முதல் டி.என்.பாளையம் செல்லும் வரை உள்ள சாலையில் நடுவே அபாயகரமான குழிகள் உள்ளன. தற்போது மழை காலம் என்பதால் மழை நீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறையினர் பழுது ஏற்பட்டுள்ள சாலைகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ஊர்ப்பொதுமக்கள், வாணிப்புத்தூர்.

வேகத்தடை வேண்டும்
சிவகிரி அருகே உள்ள மோளப்பாளையத்தில் நால் ரோடு சந்திப்பு உள்ளது. இந்த நால் ரோடு சந்திப்பில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘மோளப்பாளையம் நால்ரோட்டில் ஈரோட்டில் இருந்து திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் செல்லும் சாலை பிரிகிறது. இந்த சாலையில் போக்குவரத்து அதிகமாக இருக்கிறது. இதனால் அவ்வப்போது சிறு விபத்துகள் ஏற்படுகிறது. எனவே பேராபத்துகள் நிகழும் முன் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மோளப்பாளையம் நால் ரோட்டில் இருந்து ஈரோடு - வெள்ளகோவில் செல்லும் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்’ என்றனர்.
ஊர்பொதுமக்கள், மோளப்பாளையம்

ஒளிராத மின்விளக்குகள்
கோபி மொடச்சூர் செங்கோட்டையன் காலனி பகுதியில் பல மாதங்களாக தெரு விளக்குகள் ஒளிராமல் இருக்கின்றன. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியில் நடமாட முடியாமல் சிரமப்படுகிறார்கள். தற்போது மழைக்காலம் என்பதால் இரவு நேரங்களில் விஷ பூச்சிகளின் நடமாட்டம் இருந்தால் கூட தெரிவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எரியாத மின் விளக்குகளை ஒளிரசெய்ய நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், கோபி செங்கோட்டையன் காலனி.

தேங்கி நிற்கும் சாக்கடை நீர்
ஈரோடு ஆர்.என்.புதூர் பகுதிக்கு உள்பட்ட குறிஞ்சி நகர் பகுதியில் மாநகராட்சி மூலம் சாக்கடை நீர் வெளியேறும் வகையில் சாக்கடை வடிகால் அமைக்கப்பட்டது. ஆனால் சாக்கடை வடிகால் முழுமையாக அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் சாக்கடை நீர் தேங்கி உள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் டெங்கு, மலேரியா, காலரா போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை வடிகாலை சரி செய்து, சாக்கடை நீர் தேங்காத வகையில் வழி வகை செய்யவேண்டும். 
ஊர்பொதுமக்கள், ஈரோடு

பழுதடைந்த சுவர்
கோபி பகுதியில் உள்ள சாமிநாதபுரத்தில் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலின் சுற்றுச்சுவர் மிகவும் பழுதடைந்து உள்ளது. மேலும் தற்போது மழைக்காலம் என்பதால் வாய்க்காலில் இருந்து வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து விடும் அபாய நிலையில் உள்ளது. மேலும் அந்த பகுதியில் சிறுவர், சிறுமிகள் விளையாடுகின்றன. இதனால் பேராபத்துகள் ஏற்படும் முன் சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கோபி, பொதுமக்கள். 

பயன்படாத பயிற்சி கூடம்
ஊஞ்சலூரில் ஈரோடு-கரூர் மெயின்ரோட்டில் அரசுக்கு சொந்தமான காலி மனையில் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்த கருவிகளை இளைஞர்கள் பயன்படுத்தி வந்தார்கள். இந்தநிலையில் தற்போது அந்த இடம் புதர்மண்டி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மதுகுடிப்பவர்கள், சிறுநீர் கழிப்பவர்கள் அந்த இடத்தை பயன்படுத்துகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடற்பயிற்சி கூடத்தை மீட்டு, புதுப்பித்து தருவார்களா?
காவிரியன், ஊஞ்சலூர். 

Next Story