ஈரோட்டில் நடந்த மாவட்ட கைப்பந்து போட்டியில் ஜீ பாய்ஸ் -பி.கே.ஆர். அணிகள் சாம்பியன்


ஈரோட்டில் நடந்த மாவட்ட கைப்பந்து போட்டியில் ஜீ பாய்ஸ் -பி.கே.ஆர். அணிகள் சாம்பியன்
x
தினத்தந்தி 22 Nov 2021 2:48 AM IST (Updated: 22 Nov 2021 2:48 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் நடந்த மாவட்ட கைப்பந்து போட்டியில் பெருந்துறை ஜீ பாய்ஸ் அணியும், கோபி பி.கே.ஆர். வாலிபால் கழக அணியும் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றனர்.

ஈரோடு
ஈரோட்டில் நடந்த மாவட்ட கைப்பந்து போட்டியில் பெருந்துறை ஜீ பாய்ஸ் அணியும், கோபி பி.கே.ஆர். வாலிபால் கழக அணியும் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றனர்.
கைப்பந்து போட்டி
ஈரோடு மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில், மாவட்ட அளவிலான கைப்பந்து சாம்பியன்சிப் போட்டி ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. 
இதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 37 அணிகள் பங்கேற்றுள்ளன. ஆண்கள் பிரிவில் 28 அணிகளை சேர்ந்த வீரர்களும், பெண்கள் பிரிவில் 9 அணிகளை சேர்ந்த வீராங்கனைகளும் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
பி.கே.ஆர். அணி
போட்டிகள் நேற்றும் தொடர்ந்து நடந்தது. முடிவில் ஆண்கள் பிரிவில் பெருந்துறை ஜீ பாய்ஸ் அணி முதல் இடமும், ஈரோடு ஜீனியர் மாயா வாலிபர் கழகம் அணி 2-வது இடத்தையும், நஞ்சனாபுரம் கொங்கு கலை அறிவியல் கல்லூரி அணி 3-ம் இடத்தையும், கொங்கு என்ஜினீயரிங் கல்லூரி அணி 4-ம் இடத்தையும் பிடித்தன.
இதேபோல் பெண்கள் பிரிவில் கோபி பி.கே.ஆர். வாலிபால் கழக அணி முதல் இடத்தையும், கொங்கு என்ஜினீயரிங் கல்லூரி அணி 2-ம் இடத்தையும், கோபி பி.கே.நடராஜா வாலிபால் கழக அணி 3-ம் இடத்தையும், ஈரோடு விளையாட்டு விடுதிகள் மாணவிகள் அணி 4-ம் இடத்தையும் பிடித்தது.
பரிசளிப்பு விழா
அதைத்தொடர்ந்து மாலையில் பரிசளிப்பு விழா நடந்தது. விழாவில் மாவட்ட கைப்பந்து கழக தலைவர் எஸ்கேஎம்.மயிலானந்தன், சேர்மன் எல்.எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதல் இடம் பிடித்த அணிகளுக்கு சுழல் கோப்பைகளையும், முதல் 4 இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசுகளையும் வழங்கினார்.
விழாவில் மாவட்ட விளையாட்டு அதிகாரி சதீஷ்குமார் மற்றும் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டார்கள்.

Next Story