10 ம் வகுப்பு மாணவி தற்கொலை
10 ம் வகுப்பு மாணவி தற்கொலை
சரவணம்பட்டி
கோவை எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றியம் கொண்டையம்பாளை யத்தை சேர்ந்தவர் மணிராஜ். இவருடைய மகள் சுபாஷினி (வயது 15).
இவர் வட்டமலைபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அவர், படிப்பில் கவனம் செலுத்தாமல் அடிக்கடி செல்போனில் விளையாடிக் கொண்டு இருந்ததாக தெரிகிறது.
இதை அறிந்த பெற்றோர், சுபாஷினியை கண்டித்துள்ளனர்.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சுபாஷினி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த கோவில்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுபாஷினியின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கோவில்பா ளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story