கோகோ சாகுபடி செய்தால் அதிக லாபம் பெறலாம்


கோகோ சாகுபடி செய்தால் அதிக லாபம் பெறலாம்
x
தினத்தந்தி 22 Nov 2021 8:54 PM IST (Updated: 22 Nov 2021 8:54 PM IST)
t-max-icont-min-icon

கோகோ சாகுபடி செய்தால் அதிக லாபம் பெறலாம்

பொள்ளாச்சி 

தென்னை, பாக்கு தோட்டங்களில் கோகோவை ஊடுபயிராக சாகுபடி செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கோகோ சாகுபடி

பொள்ளாச்சி, ஆனைமலை வட்டார பகுதிகளில் தென்னை விவசாயம் முதன்மையாக விளங்குகிறது.  இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

வளர்ந்த தென்னை, பாக்கு, ரப்பர் தோட்டங்களில் கோகோவை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். நடவு செய்த 3 ஆண்டு முதல் 40 ஆண்டுகள் வரை நல்ல பலன் தரும். கோகோ பயிரிட 50 சதவீத நிழல் தேவை என்பதால் 7 ஆண்டுகளுக்கு மேல் உள்ள தென்னை, பாக்கு தோட்டங்களில் எளிதாக சாகுபடி செய்யலாம்.

அதிக லாபம்

பாசன நீரின் தன்மை கிராமிற்கு 1.5 மில்லி மோஸ் அளவிற்கு குறைவாக இருக்க வேண்டும். கோகோ இலைகள் உதிர்வதன் மூலம் மண்ணில் அங்ககசத்து கூடுவதால் தென்னை, பாக்கில் மகசூல் அதிகரிக்கும்.  இதனால் குறைந்த செலவில் அதிக லாபம் பெற முடியும். 
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story