திருவள்ளூரில் உள்ள கோர்ட்டு வளாகத்துக்குள் புகுந்த அரியவகை ஆஸ்திரேலிய ஆந்தை
திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் உள்ளே நேற்று முன்தினம் மாலை அரியவகை ஆஸ்திரேலிய ஆந்தை புகுந்தது.
இதையடுத்து செய்வதறியாமல் தவித்த ஆந்தையை கண்ட அங்கிருந்த கோர்ட்டு ஊழியர்கள் உடனடியாக திருவள்ளூரில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாஸ்கரன் உத்தரவின் பேரில், நிலைய அலுவலர் இளங்கோவன், சிறப்பு நிலைய அலுவலர் ஞானவேல் மற்றும் தீயணைப்பு அலுவலர்கள் கோர்ட்டு வளாகத்திற்குள் விரைந்து சென்று அங்கிருந்த அரியவகை ஆஸ்திரேலிய ஆந்தையை உயிருடன் பிடித்தனர்.
பின்னர், அதனை பத்திரமாக கொண்டு சென்று பூண்டி காப்பு காட்டில் விட்டனர்.
Related Tags :
Next Story