காதலியுடன் பேச முடியாததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
காதலியுடன் பேச முடியாததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
ஆனைமலை
ஆனைமலை அருகே காதலியுடன் பேச முடியாததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சிறுமியுடன் காதல்
ஆனைமலை அருகே கோட்டூரில் உள்ள இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாமை சேர்ந்தவர் ஞானசேகர். இவருடைய மகன் அஜித்குமார் (வயது 23). கூலி வேலை செய்து வந்த இவர் 17 வயதான சிறுமியை காதலித்து வந்தார்.
இந்த காதல் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததால் அவர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் அந்த சிறுமியை அவர்கள் ராமேசுவரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
விஷம் குடித்தார்
இதனால் அஜித்குமாரால் கடந்த 2 மாதமாக தனது காதலியுடன் பேச முடியவில்லை. பலமுறை தொடர்பு கொண்டும் பேச முடியாததால் விரக்தியில் இருந்தார். இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது அஜித்குமார் விஷம் குடித்தார்.
வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பரிதாப சாவு
அங்கு அவருக்கு டாக்டா்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி அஜித்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story