அன்னூர் எப்சி அணி சாம்பியன்
அன்னூர் எப்சி அணி சாம்பியன்
கோவை,
குழந்தைகள் தின விழாவையொட்டி, மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி கோவையில்நடந்தது.
இதில் கேரளா, கர்நாடகா மாநிலங்கள் மற்றும் ஊட்டி, கோவை உள்பட 48 அணிகள் கலந்து கொண்டன.
இதில் 10, 12, 14 மற்றும் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பிரிவு வாரியாக நடந்தது.
இதில் 10 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் டி.பி.எஸ்.எஸ். அணியும், கோவை என்.எஸ்.எஸ். அணியும் மோதின. இதில் 2-2 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
இதையடுத்து பெனால்டி முறையில் கோவை என்.எஸ்.எஸ். அணி 5-4 என்ற கோல் கணக்கில் வென்றது.
12 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ஜாஸ்பர் அணி, ட்ரீம் பிக்பாஸ் சாஸர் ஸ்கூல் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.
14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் ஒய்.எப்.எஸ்.சி. அணி, எம்.எஸ். அணி யை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
16 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பிரிடேட்டர் எப்.சி. அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி அன்னூர் எப்.சி. அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
Related Tags :
Next Story