தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
வாகன நிறுத்த வசதி இல்லை
பொள்ளாச்சியில் உள்ள நியூஸ்கீம் ரோடு, கடை வீதி மற்றும் முக்கிய சாலைகளில் உள்ள வணிக நிறுவனங்களில் வாகனங் களை நிறுத்த வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் வாகனங் களை ரோட்டின் ஓரத்தில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவி வருவதால், வாகனங்களை நிறுத்த இடவசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
மாரிமுத்து, பொள்ளாச்சி.
நடைபாதை ஆக்கிரமிப்பு
பொள்ளாச்சி பழைய பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்தாமல் சாலை ஓரத்தில் நடந்து செல்கிறார்கள். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்ற வேண்டும்.
முருகன், வடக்கிபாளையம்
வடிகால் வசதி வேண்டும்
கோவை உக்கடம் -செல்வபுரம் பைபாஸ் சாலையில் வடிகால் வசதி போதுமான அளவில் இல்லை. இதனால் பலத்த மழையின் போது குளக்கரையை ஒட்டியுள்ள இந்த சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த சாலையில் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.
சாகுல்ஹமீது, உக்கடம்.
பஸ்களை நிறுத்துவது இல்லை
பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன் பட்டி காந்திபுரம் பஸ்நிறுத்தத்தில் பஸ்கள் சரியாக நிற்பது இல்லை. இதனால் இங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் சரியான நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து காந்திபுரம் பஸ்நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
சதீஷ், காந்திபுரம்.
போக்குவரத்து நெரிசல்
கோவை தெற்கு உக்கடம் அறிஞர் அண்ணாநகர் பகுதியில் கடைகள் முன்பு வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. காலையில் நிறுத்தப்படும் வாகனங்களை இரவில்தான் எடுத்துச்செல்கிறார் கள். இதனால் அந்த வழியாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அத்துடன் விபத்துகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இங்கு கடைகள் முன்பு வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும்.
ஹக்கீம், தெற்கு உக்கடம்.
வீணாக செல்லும் தண்ணீர்
கோவை மாநகராட்சி 79-வது வார்டு லாரி ரோடு சக்தி மாரியம்மன் கோவில் தெருவில் உப்புத்தண்ணீர் பிடிக்க குழாய் உள்ளது. இந்த குழாயின் உயரம் மிகக்குறைவாக இருப்பதால் குடத்தை வைத்து தண்ணீர் பிடிக்க முடியவில்லை. இதனால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே இந்த தண்ணீர் குழாயை சரிசெய்ய வேண்டும்.
மாரியப்பன், கோவை.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
கோவை வெள்ளக்கிணறு பிரிவு அலங்கார தோட்டத்தில் வீடுகளின் அருகே குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பைகள் சுத்தம் செய்யப்படாததால் அவைகள் மலைபோன்று குவிந்து கிடக்கிறது. அத்துடன் பழுதான மெத்தைகள், தலை யணைகளையும் இங்கு போட்டு உள்ளனர். இதன் காரணமாக அருகில் உள்ள வீடுகளில் இருக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும்.
சங்கரி, வெள்ளக்கிணறு பிரிவு.
சாலையின் நடுவே குழிகள்
கோவை கவுண்டம்பாளையத்தில் இருந்து இடையர்பாளையம் செல்லும் சாலையில் மின்சார வயர்கள் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்டது. ஆனால் சரியாக அவை மூடப்படாமல் இருப்பதால் ஆங்காங்கே ரோட்டில் குழிகள் இருக்கிறது. பல இடங்களில் சாலையின் நடுவே குழிகள் இருப்பதால் அங்கு தடுப்பான்கள் வைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சாலையில் உள்ள குழிகளை மூட வேண்டும்.
சுப்பையா,கவுண்டம்பாளையம்.
ஓடையில் கொட்டப்படும் கழிவுகள்
கோவை அருகே உள்ள மதுக்கரை பச்சாபாளையம் பகுதியில் உள்ள ஓடையில் மூட்டை மூட்டையாக ஏராளமான கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளன. இதனால் இந்த வழியாக செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நீர்நிலைகள் மாசு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் அந்த கழிவுகளை அகற்றுவதுடன், நீர்நிலைகளில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.
சிவராமன், பச்சாபாளையம்.
அரசு பஸ்கள் இயக்கப்படுமா?
கோவை சிங்காநல்லூர் நீலக்கோணம்பாளையம், எஸ்.ஐ.எச்.எஸ். காலனி ஆகிய பகுதிகளுக்கு 43, 20 பி. ஆகிய அரசு டவுன் பஸ்கள் வந்தன. தற்போது அந்த பஸ்கள் வருவது இல்லை. இதனால் இங்கிருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல மாணவர் களும், வேலைகளுக்கு செல்ல பொதுமக்களும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே நிறுத்தப்பட்ட இந்த பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும். அதுபோன்று எஸ்.ஐ.எச்.எஸ். காலனியில் இருந்து உப்பிலிபாளையம், சவுரிபாளையம், பீளமேடு, காந்திபுரம் வரை புதிய வழித்தடத்தில் பஸ் இயக்க வேண்டும்.
மனோஜ், எஸ்.ஐ.எச்.எஸ்.காலனி.
ஆபத்தான மரம்
கோவை ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகரில் உள்ள கே.ஆர்.கே.வீதியில் சாலை ஓரத்தில் ஒரு மரம் உள்ளது. அந்த மரத்தின் அடிப்பகுதி ஓட்டை விழுந்து எந்த நேரத்திலும் முறிந்து விழக்கூடிய ஆபத்தான நிலையில் இருக்கிறது. இந்த சாலையில் தினமும் ஏராளமானோர் சென்று வருகிறார்கள். இதனால் மரம் முறிந்து விழுந்தால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதற்கு முன்பு இந்த மரத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லட்சுமி நிவாஸ், கிருஷ்ணசாமி நகர்.
Related Tags :
Next Story