புகார்பெட்டி


புகார்பெட்டி
x
தினத்தந்தி 23 Nov 2021 2:08 AM IST (Updated: 23 Nov 2021 2:08 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தேங்கி நிற்கும் மழைநீர் 

மதுரை தபால் தந்தி நகர் விரிவாக்க பகுதியான முனியாண்டி கோவில் தெரு பகுதியில் தற்போது பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. மழைநீரும், கழிவுநீரும் கலந்து சுகாதார சீர்கேடு நிலவுகிறது. எனவே தேங்கி நிற்கும் மழைநீரை உடனே வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 பொதுமக்கள்,தபால் தந்தி நகர்.

போக்குவரத்து நெரிசல் 

மதுரை வடக்கு மீனாம்பாள்புரம் சூலமங்கலம் மெயின்ரோடு திருப்பம் மற்றும் நேதாஜி மெயின் ரோட்டில் நகர் பஸ்கள் திரும்ப முடியாமல் திணறுகிறது. இதனால் இப்பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சரி செய்ய வேண்டும். 
அபுபக்கர், மதுரை.

கால்நடைகள் தொல்லை

 மதுரை குலமங்குளம் மெயின் ரோட்டில் அய்யானார் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இதன் அருகில் மாடுகள், குதிரைகள் உள்ளிட்ட கால்நடைகள் சுற்றி திரிகின்றன. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றி திரியும் கால்நடைகளை பிடித்து அகற்ற வேண்டும்.
பாண்டியன், மதுரை.

தேங்கி கிடக்கும் குப்பை 

     சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு மருத்துவமனையின் அருகில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. மேலும் மருத்துவமனையின் அருகே உள்ள குப்பைகள் நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் உள்ளது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். எனவே தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றுவதுடன், மழைநீரையும் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
அருண், திருப்புவனம்.

சேதமடைந்த பள்ளி கட்டிடம் 

 மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் பரவையில்  அரசுப்பள்ளி ஓன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தநிலையில் இந்த பள்ளி கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் பயப்படுகின்றனர். எனவே மாணவர்களின் நலன் கருதி புதிய பள்ளி கட்டிடம் கட்டி தர வேண்டும். 
காந்திபாஸ்கரன், பரவை. 
 
வாய்க்கால் தூர்வாரப்படுமா? 

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி கொத்தன்குளம் கிராமத்தில் வாய்க்கால்கள் தூர்வாரமல் உள்ளது. இதனால் தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட தொற்றுநோய் பரவும் அபாயநிலை நிலவுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
காவியா,கொத்தன்குளம்.

நடைேமடை தேவை 

   மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி பஸ் நிலையம்  அருகே பொதுமக்கள் நடந்து செல்ல சரியான சாலை வசதி இல்லை. மக்கள் சாலையில் நடந்து செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையை கடந்து செல்லும் வகையில் நடைமேடை அமைத்து தர வேண்டும்.
கரிகாலன், மேலூர்.

சுகாதார சீர்கேடு
 மதுரை நாகமலைபுதுக்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. இதன்காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. துர்நாற்றம் காரணமாக அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், நாகமலைபுதுக்கோட்டை.


Next Story