அம்மாபேட்டை அருகே அரசு பள்ளிக்கூடத்தில் மாடி ஏறி வகுப்பறையில் அமர்ந்து மதுகுடித்த குடிமகன்கள்- நாற்காலிகளையும் திருடிச்சென்றனர்
அம்மாபேட்டை அருகே அரசு பள்ளிக்கூடத்தில் மாடி ஏறி வகுப்பறையில் அமர்ந்து மதுகுடித்த குடிமகன்கள் நாற்காலிகளையும் திருடிச்சென்றார்கள்.
அம்மாபேட்டை
அம்மாபேட்டை அருகே அரசு பள்ளிக்கூடத்தில் மாடி ஏறி வகுப்பறையில் அமர்ந்து மதுகுடித்த குடிமகன்கள் நாற்காலிகளையும் திருடிச்சென்றார்கள்.
வகுப்பறைக்குள்...
கோவில்கள் அனைத்தும் பள்ளிகள் செய்வோம் என்றார் மகாகவி பாரதி. ஆனால் குடிமகன்களுக்கு கோவிலும், பள்ளிக்கூடமும், மது அருந்தும் பாரும் ஒன்றுதான். பொது இடங்களில் மதுகுடித்து போனதால் அலுத்துப்போன மதுபிரியர்கள் வித்தியாசமாக மாடி ஏறி வகுப்பறைக்குள் சென்று மகிழ்ச்சியாக மதுகுடித்த சம்பவம் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
அம்மாபேட்டை அருகே உள்ள குறிச்சியில் அரசு உயர்நிலைப் பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.
மாணவர்கள் அதிர்ச்சி
குறிச்சி பள்ளிக்கூடத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் உள்ளது. ஆனால் அது சிதிலமடைந்து காணப்படுகிறது. அதனால் விடுமுறை நாட்களில் அப்பகுதிைய சேர்ந்த சிலர் பள்ளிக்கூடத்துக்கு வந்து சீட்டு ஆடுவது, மது அருந்துவது என பல்வேறு தகாத சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. நேற்று காலை வழக்கம்போல் மாணவர்கள் பள்ளிக்கு வந்தார்கள். ஆனால் 10-ம் வகுப்புக்கு சென்ற மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.
மதுகுடித்து கொண்டாட்டம்
உள்ளே மாணவர்களின் மேஜை நடுவில் மதுபாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள், தின்றதுபோக எஞ்சிய தின்பண்டங்கள் கிடந்தன. யாரோ மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு மது அருந்த குறிச்சி பள்ளிக்கூடத்துக்கு வந்துள்ளார்கள். அதன்பின்னர் வளாகத்தில் இருந்து ஒரு மரத்தின் வழியாக மாடி ஏறி, 10-ம் வகுப்பறையின் பூட்டை உடைந்து, உள்ளே சென்று பாரில் இருப்பதுபோல் கொண்டாட்டமாக மது அருந்தி உள்ளார்கள். நள்ளிரவு செல்லும்போது வகுப்பறையில் இருந்து 2 பிளாஸ்டிக் நாற்காலிகளையும் திருடிச்சென்றது தெரிய வந்தது.
தண்டிக்க வேண்டும்
இதுகுறித்து ஆசிரியர்கள் உடனே அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தார்கள். அப்போது ஆசிரியர்களும், மாணவ-மாணவிகளும் போலீசாரிடம் பள்ளி வளாகத்தில் அடிக்கடி இதுபோல் நடக்கிறது. இப்போது எல்லை மீறி வகுப்பறையின் பூட்டை உடைத்தே உள்ளே வந்து மது அருந்தி சென்றிருக்கிறார்கள். அவர்களை உடனே பிடித்து தண்டிக்க வேண்டும் என்றார்கள்.
இரவு காவலர்கள்
மேலும் குறிச்சி பள்ளியில் சிதிலமடைந்து கிடக்கும் சுற்றுச்சுவரை உயரமாக கட்டிக்கொடுக்க வேண்டும். பள்ளிக்கு இரவு காவலர்களை பணியமர்த்த வேண்டும். இரவு நேரங்களில் பள்ளிக்கூடம் அருகே வரும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை எழுப்பி உள்ளார்கள்.
அரசு பள்ளியில் மாடி ஏறி, வகுப்பறையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் மதுகுடித்துவிட்டு சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story