ஆர்.கே.நகர் அரசு கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்


ஆர்.கே.நகர் அரசு கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 23 Nov 2021 5:25 PM IST (Updated: 23 Nov 2021 5:25 PM IST)
t-max-icont-min-icon

சென்னை ஆர்.கே.நகர் அரசு கலைக்கல்லூரியில் படித்து வரும் மாணவ-மாணவிகள், நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் பள்ளி வளாகத்திலேயே மாணவிகள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து நடைபெறுவதை கண்டித்தும், 2 வாரத்துக்கு முன்பு கோவையில் பாலியல் வன்கொடுமையில் மாணவி தற்கொலை செய்துகொண்டதை தொடர்ந்து கரூர், ஈரோடு போன்ற மாவட்டங்களிலும் பாலியல் தொந்தரவால் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதால் இறப்பு அதிகரித்து உள்ளது.

பள்ளி வளாகத்திலேயே மாணவிகள் தற்கொலை செய்துகொள்வதை தடுக்க பெற்றோர், ஆசிரியர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட தொலைபேசி எண்களை வகுப்புகளில் ஒட்ட வேண்டும். கரூரில் தற்கொலை செய்த மாணவியின் பெற்றோர் புகார் அளிக்க சென்றபோது அவர்களை கடுமையாக திட்டி அனுப்பிய போலீஸ் இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story