வீட்டின் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் தங்க, வைர நகை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் தங்க, வைர நகைகள் மற்றும் ரூ.45 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
திருவேற்காடு, மாதிராவேடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தாமரைசெல்வன் (வயது 54). இவர், கேட்டரிங் நிறுவனம் நடத்தி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இவர் வீட்டை பூட்டி விட்டு நாகப்பட்டினம் சென்று விட்டார். நேற்று முன்தினம் இரவு வீட்டிக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகை, ரூ.2 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் மற்றும் ரூ.45 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தாமரைசெல்வன் அளித்த புகாரின் பேரில், திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story