மாமல்லபுரம் வந்த நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள்


மாமல்லபுரம் வந்த நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள்
x
தினத்தந்தி 23 Nov 2021 6:14 PM IST (Updated: 23 Nov 2021 6:14 PM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரம் வருகை தந்த நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் புராதன சின்னங்களை சுற்றி பார்த்தனர்.

நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள்

வட இந்தியாவை சேர்ந்த 6 மாநிலங்களில் இருந்து மத்திய சமூக நலத்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் 18 பேர் ஸ்ரீமதி ரமாதேவி தலைமையில் நேற்று மாமல்லபுரம் வந்தனர்.

அவர்கள் வெண்ணை உருண்டைக்கல், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களை சுற்றிப்பார்த்து ரசித்தனர். அவர்களுக்கு மாமல்லபுரம் பல்லவர் கால வரலாற்று சிற்பங்கள் பற்றிய தகவல்களை சுற்றுலா வழிகாட்டி ஒருவர் விளக்கி கூறினார்.

புகைப்படம் எடுத்தனர்

வெண்ணை உருண்டைக்கல் முன்பு 18 உறுப்பினர்களும் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் அங்கிருந்து சுற்றி பார்த்து கிளம்பும்போது அங்கு பாசிமணி விற்று கொண்டிருந்த பெண்களை சில பெண் எம்.பி.க்கள் அழைத்து அவர்களிடம் பாசிமணிி வாங்கி ஊக்கப்படுத்தியதை காண முடிந்தது.


Next Story