செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 54 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 54 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 73 ஆயிரத்து 302 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 97 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 2,529 பேர் உயிரிழந்துள்ளனர். 676 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 13 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75 ஆயிரத்து 440 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 73 ஆயிரத்து 973 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 1,262 பேர் உயிரிழந்துள்ளனர். 205 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story