சிஐடியு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்


சிஐடியு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 23 Nov 2021 6:59 PM IST (Updated: 23 Nov 2021 6:59 PM IST)
t-max-icont-min-icon

சிஐடியு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

வால்பாறை

வால்பாறையில் அரசு போக்குவரத்து கழகத்தின் சிஐடியு ஊழியர் சம்மேளனம் சார்பில் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். ஒய்வுபெற்ற போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான பணப்பலன்களை தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீட்டை அமல்படுத்த வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும். அதிகாரிகளின் அடக்குமுறைகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வார ஒய்வு முறை பறிப்பை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது. போராட்டத்தில் வால்பாறை சி.ஐ.டி.யு தொழிற்சங்க பொதுச்செயலாளர் பரமசிவம் தலைமையில் வால்பாறை அரசு போக்குவரத்து கழக கிளை  ஊழியர்கள் மற்றும் சம்மேளன நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story