பள்ளி வளாகத்தில் விஷம் குடித்து மாணவி தற்கொலை முயற்சி


பள்ளி வளாகத்தில் விஷம் குடித்து மாணவி தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 23 Nov 2021 9:23 PM IST (Updated: 23 Nov 2021 9:23 PM IST)
t-max-icont-min-icon

பள்ளி வளாகத்தில் விஷம் குடித்து மாணவி தற்கொலை முயற்சி


பேரூர்

கோவை அருகே பள்ளி வளாகத்தில் விஷம் குடித்து 9-ம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு முயன்றார். 


இது தொடர்பாக பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.


இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது

பள்ளி மாணவி

கோவையை அடுத்த கருமத்தம்பட்டி அருகே உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் நேற்று முன்தினம் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். 

இதை பார்த்து சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பள்ளி நிர்வாகத்தினர் மாணவியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது குறித்த தகவலின் பேரில் கருமத்தம்பட்டி போலீசார் தற்கொலைக்கு முயன்ற மாணவியிடம் விசாரணை நடத்தினர். 

இதில்,  கருமத்தம்பட்டி அருகே சங்கோதிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த ராமர் (வயது 39) என்பவருடன் மாணவிக்கு பழக் கம் ஏற்பட்டது.

பாலியல் தொல்லை

இதனால் மாணவி, அவரிடம் செல்போன் வாங்கி தனது தோழி களுடன் பேசி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் ராமர், மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரிய வந்தது. 

இதையடுத்து வழக்கு பேரூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரூர் அனைத்து மகளிர் போலீசார், மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ராமர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.


பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். பள்ளி வளாகத்தில் 9-ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story