அண்ணன் தம்பி உள்பட 4 பேர் கைது


அண்ணன்  தம்பி உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 23 Nov 2021 9:36 PM IST (Updated: 23 Nov 2021 9:36 PM IST)
t-max-icont-min-icon

அண்ணன் தம்பி உள்பட 4 பேர் கைது


போத்தனூர்

குண்டுவெடிப்பு வழக்கில் விடுதலையானவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் அண்ணன்- தம்பி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆடு திருடிய ஆத்திரத்தில் தாக்கியதில் அவர் இறந்து விட்டதாக வாக்குமூலம் அளித்தனர்.

குண்டுவெடிப்பு வழக்கில் விடுதலை

கோவை போத்தனூர் இட்டேரி பகுதியை சேர்ந்தவர் சேட் பக்ருதீன் (வயது45). இவர் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 47-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். 

நீண்டநாள் சிறையில் இருந்த அவர், வழக்கு விசாரணைக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார். சேட் பக்ருதீன் மீது கோவையில் ஏராளமான குற்ற வழக்குகள் உள்ளன.

கடந்த 22 -ந்தேதி அதிகாலை 2 மணிக்கு கோவை குறிச்சி பிரிவு கருப்பராயன் கோவில் பகுதியை சேர்ந்த சுலைமான் என்பவரது வீட்டின் முன்பு கட்டியிருந்த ஆட்டை சேட்பக்ருதீன் திருடி தனது ஆட்டோவில் ஏற்றி உள்ளார்.
பிடித்து தாக்கினர்

அப்போது, ஆட்டின் சத்தம் கேட்டு சுலைமான் எழுந்து வந்தார். அவர், தனது வீட்டின் முன்பு கட்டி இருந்த ஆட்டை பிடித்து சென்றவரை தனது மகன்களுடன் சேர்ந்து துரத்திச் சென்றனர்  

ஆட்டை தூக்கி சென்ற ஆட்டோ போத்தனூர் ஆட்டுதொட்டிலில் உள்ள ஒரு இறைச்சிக் கடைமுன்பு நின்றுள்ளது.


உடனே அவர்கள், ஆட்டை திருடிய சேட்பக்ருதீனை பிடித்து தாக்கி னர். பின்னர் போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 


உடனே போலீசார் விரைந்து வந்து விசாரித்து விட்டு சேட்பக்ருதீனை மறுநாள் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வருமாறு கூறி விட்டு சென்றனர்.

அடித்துக்கொலை

இந்த நிலையில் சேட்பக்ருதீன் குடிபோதையிலும், காயத்துடனும் அவரது வீட்டு முன்பு மயங்கி கிடந்தார். 

உடனே அவரை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

சிலர் தாக்கியதால் சேட்பக்ருதீன் இறந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போத்தனூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

4 பேர் கைது

இந்தநிலையில் சேட்பக்ருதீன் கொலை தொடர்பாக எஸ்.அபுதாகீர் (வயது28), அவருடைய தம்பி எஸ்.முகமது அலி (23), நண்பர்கள் முகமது நஸீப் (24), முகமது அன்சார் (24) ஆகிய 4 பேரை கைது செய்தனர். 

இவர்கள் நஞ்சுண்டாபுரம், இட்டேரி பகுதியை சேர்ந்தவர்கள். 

ஆடு திருடியதால் ஆத்திரத்தில் சேட்பக்ருதீனை இரும்புக்கம்பி, தடிகளால் தாக்கியதாகவும், 

அதில் அவர் இறந்து விட்டதாகவும் வாக்குமூலம் அளித்தனர். கைதான 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story