ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Nov 2021 10:41 PM IST (Updated: 23 Nov 2021 10:41 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் : 

திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்டக்குழு உறுப்பினர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வினோத்குமார் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். இதில் இளைஞர் பெருமன்றத்தினர் பலர் கலந்துகொண்டனர். 


இந்த ஆர்ப்பாட்டத்தின் போது திண்டுக்கல் அருகே முத்தனம்பட்டியில் செயல்படும் நர்சிங் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளரை போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும். மேலும் மாணவ-மாணவிகளின் நலன்கருதி பெற்றோர், மாணவர்கள், அதிகாரிகளை கொண்டு குழு அமைத்து கல்லூரி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

Next Story