மாவட்ட செய்திகள்

விவசாயி ஏ.டி.எம். கார்டை திருடி ரூ.2½ லட்சத்துக்கு தங்ககாசுகள் வாங்கிய வாலிபர் + "||" + Farmer ATM The youth who stole the card and bought gold coins for Rs. 2 lakhs

விவசாயி ஏ.டி.எம். கார்டை திருடி ரூ.2½ லட்சத்துக்கு தங்ககாசுகள் வாங்கிய வாலிபர்

விவசாயி ஏ.டி.எம். கார்டை திருடி ரூ.2½ லட்சத்துக்கு தங்ககாசுகள் வாங்கிய வாலிபர்
உசிலம்பட்டியில் பணம் எடுத்து தருவதாக நடித்து ஏ.டி.எம். கார்டை திருடி ரூ.2½ லட்சத்துக்கு தங்க காசுகளை வாங்கி குவித்த வாலிபர் போலீசில் சிக்கினார்.
உசிலம்பட்டி, 

உசிலம்பட்டியில் பணம் எடுத்து தருவதாக நடித்து ஏ.டி.எம். கார்டை திருடி ரூ.2½ லட்சத்துக்கு தங்க காசுகளை வாங்கி குவித்த வாலிபர் போலீசில் சிக்கினார்.

ரூ.2½ லட்சம் மோசடி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள நடுப்பட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 54). விவசாயி. இவர் கடந்த ஜூலை மாதம் உசிலம்பட்டி மதுரை ரோட்டில் உள்ள ஒரு ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க வந்துள்ளார். அப்போது அங்கிருந்த ஒரு வாலிபர் அவருக்கு பணம் எடுத்து தருவது போல் நடித்து ெஜயராஜின் ஏ.டி.எம்.கார்டை பதுக்கி விட்டு வேறு ஒரு ஏ.டி.எம்.கார்டை அவரிடம் கொடுத்து உள்ளார்.
அதன்பிறகு ஜெயராஜின் ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்தி அந்த வாலிபர் பொருட்கள் வாங்கி உள்ளார். தான் பணம் எடுக்காமல் தனது செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்ததை அறிந்து ஜெயராஜ் அதிர்ச்சி அடைந்தார். அதன்பிறகு தன்னுடைய ஏ.டி.எம்.கார்டை பரிசோதித்த போது அது தன்னுடையது இல்ைல என உணர்ந்தார். பணம் எடுத்து தருவது போல நடித்து ஏ.டி.எம்.கார்டை மாற்றி தனது வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டு இருப்பதை உணர்ந்தார்.

வாலிபர் கைது

இதை தொடர்ந்து இது குறித்து ஜெயராஜ் உசிலம்பட்டி நகர் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பணம் எடுக்கப்பட்ட ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.அப்போது ஒரு வாலிபர் ஜெயராஜ் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்த காட்சி பதிவாகி இருந்தது. அந்த வாலிபர் யார் என விசாரித்த போது, அவர் காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீரங்ககிருஷ்ணாபுரத்தை சேர்ந்த மூர்த்தி மகன் டெல்லி கணேஷ்(31) என தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் டெல்லி கணேஷ், ஜெயராஜூக்கு ெசாந்தமான ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்தி பல்வேறு கடைகளில் ரூ.2½ லட்சத்துக்கு தங்க காசுகளை வாங்கி வைத்தது தெரிய வந்தது. அந்த தங்க காசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.