மீனாட்சி அம்மன் கோவிலில் சிவராஜ்சிங் சவுகான் தரிசனம்


மீனாட்சி அம்மன் கோவிலில்  சிவராஜ்சிங் சவுகான் தரிசனம்
x
தினத்தந்தி 24 Nov 2021 1:28 AM IST (Updated: 24 Nov 2021 1:42 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் சாமி தரிசனம் செய்தார்.

மதுரை,

மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் தனி விமானம் மூலம் நேற்று இரவு மதுரை வந்தார். பின்னர் அவர் அங்கிருந்து நேராக காரில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தடைந்தார். அவரை கோவில் அதிகாரிகள் வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர். அங்கு அவர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சன்னதி உள்ளிட்ட பல்வேறு சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். மேலும் அவர் கோவிலில் உள்ள தூண்கள், சிற்பங்கள் கண்டு வியந்து, அதனை பற்றி கேட்டறிந்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு லட்டு மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. அவருடன் அவருடைய மனைவி சாதனா சிங் சவுகான் மற்றும் பா.ஜ.க.நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடன் வந்திருந்தனர். மத்திய பிரதேச முதல்-மந்திரி வருகையையொட்டி கோவில் மற்றும் அவர் செல்லும் வழிகளில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். கோவில் தரிசனத்தை முடித்து கொண்டு அவர் பசுமலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார். இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கு சிவராஜ்சிங் சவுகான் செல்ல உள்ளார்.

Next Story