ஆபத்தை உணராமல் செல்பி எடுக்க திம்பம் அருவி பாறையில் ஏறும் வாகன ஓட்டிகள்- வனத்துறை எச்சரிக்கை
ஆபத்தை உணராமல் செல்பி எடுக்க திம்பம் அருவி பாறையில் வாகன ஓட்டிகள் ஏறுகிறார்கள். இதற்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
தாளவாடி
ஆபத்தை உணராமல் செல்பி எடுக்க திம்பம் அருவி பாறையில் வாகன ஓட்டிகள் ஏறுகிறார்கள். இதற்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
அருவி பாறைகள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆசனூர் மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக விட்டு விட்டு பலத்த பெய்து வருகிறது. இதனால் மலையில் உள்ள பல்வேறு ஓடைகளில் இருந்து வரும் மழைநீர் திம்பம் மலையில் பாறை முகடுகளில் அருவியாக மாறி ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் இதுபோன்ற திடீர் அருவிகளை பார்த்து ரசிக்கிறார்கள். சிலர் குளித்து மகிழ்கிறார்கள். ஆனால் பலர் ஆபத்தை உணராமல் செல்பி எடுப்பதற்காக கையில் செல்போனை வைத்துக்கொண்டு வழுக்கும் அருவி பாறைகளில் ஏறுகிறார்கள்.
எச்சரிக்கை
அருவியின் உச்சி பகுதிக்கு திரில் அனுபவத்துக்காக செல்கிறார்கள். அதுபோன்ற இடங்களில் பாசிபடர்ந்து இருக்கும். வழுக்கி விழுந்தால் உயிர் இழக்கும் அபாயம் நேரிடும். மேலும் அருவி பகுதியில் தேங்கியிருக்கும் தண்ணீரில் யானைகள், சிறுத்தைகள் தண்ணீர் குடிக்க வருகின்றன.
எனவே சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் அருவி பாறைகளில் செல்பி எடுக்க ஏறக்கூடாது என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளார்கள்.
Related Tags :
Next Story