நம்பியூரில் போக்குவரத்து கழக ஊழியர்கள் உண்ணாவிரதம்


நம்பியூரில் போக்குவரத்து கழக ஊழியர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 24 Nov 2021 3:08 AM IST (Updated: 24 Nov 2021 3:08 AM IST)
t-max-icont-min-icon

நம்பியூரில் போக்குவரத்து கழக ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

நம்பியூர்
நம்பியூரில் போக்குவரத்து கழக ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்கள். 
போக்குவரத்து கழக ஊழியர்கள்
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் உள்ள அரசு போக்குவரத்து கழக கிளை முன்பு, அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சி.ஐ.டி.யு.) சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. 
 சங்கத்தின் தலைவர் சண்முகம் உண்ணாவிர போராட்டத்துக்கு தலைமை தாங்கினார். சங்கத்தின் கிளை நிர்வாகிகள் ரங்கசாமி, சண்முகம், மத்திய சங்க உதவித் தலைவர் கணேசன், பொதுச்செயலாளர் அய்யாச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட மத்திய சங்க உதவி தலைவர்கள் முருகையா, இளங்கோ ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
ஊதிய பேச்சுவார்த்தை
அப்போது, போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதிய பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். ஓய்வு பெற்றோரின் பணப்பலன்களை வழங்கவேண்டும். அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீடு ஆகியவற்றை வழங்க வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருவரும் பேசினார்கள். 
சங்கத்தின் நிர்வாகிகள் கார்த்திகேயன், தங்கராசு உள்பட பலர் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டார்கள். 


Next Story