ஆசனூர் அருகே தொடர் மழையால் சிமெண்டு காரைகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் பள்ளிக்கூட கட்டிடம்- உடனே சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ஆசனூர் அருகே தொடர் மழையால் சிமெண்டு காரைகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் பள்ளிக்கூட கட்டிடம்- உடனே சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 24 Nov 2021 3:08 AM IST (Updated: 24 Nov 2021 3:08 AM IST)
t-max-icont-min-icon

ஆசனூர் அருகே தொடர் மழையால் சிமெண்டு காரைகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் பள்ளிக்கூட கட்டிடம் காணப்படுகிறது. கட்டிடத்தை உடனே சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாளவாடி

காரைகள் பெயர்ந்து...
தாளவாடி ஒன்றியம் திங்களூர் ஊராட்சிக்கு உள்பட்டது ஆசனூர் அருகே உள்ள கோட்டமாளம் கிராமம். இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 
இந்த பள்ளிக்கூடத்தில் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த பகுதியில் கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிக்கூட கட்டிடம் மழையில் நனைந்து வலுவிழுந்து வருகிறது. 
இதுகுறித்து மலைக்கிராம மக்கள்  கூறும் போது, ‘பள்ளிக்கூட கட்டிடத்தின் முன்புறம் உள்ள சிலாப்பில் இருந்து  சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. கட்டிடம் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் மாணவ-மாணவிகள் உள்ளனர்.
சீரமைக்க கோரிக்கை
மேலும் பள்ளிக்கூடத்தில் போதுமான குடிநீர் வசதியும் செய்து தரப்படவில்லை. இதனால் மாணவ-மாணவிகள் தங்கள் வீடுகளில் இருந்தே குடிநீர் எடுத்து வரும் நிலை உள்ளது.
எனவே ஆபத்தான நிலையில் காணப்படும் கட்டிடத்தை உடனே சீரமைக்கவும், குடிநீர் வசதி செய்து கொடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Next Story