மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 57 பேர் பாதிப்பு + "||" + In Chengalpattu district, corona infection affected 57 people in a single day

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 57 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 57 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 57 பேர் பாதிக்கப்பட்டனர்.
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 57 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 73 ஆயிரத்து 361 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 173 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 2,529 பேர் உயிரிழந்துள்ளனர். 659 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 17 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75 ஆயிரத்து 457 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 73 ஆயிரத்து 997 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,263 ஆக உயர்ந்துள்ளது. 197 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.