வெள்ளத்தில் சிக்கிய பெண் பலி
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய பெண் பலியானார்.
உத்திரமேரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் கேதாரீஸ்வரர் கோவில் தெருவில் வசித்து வருபவர் குமாரசாமி, இவரது மனைவி லட்சுமி(வயது 38). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
அந்தபகுதியில் உள்ள ஓடையில் லட்சுமி நேற்று நண்டு பிடிப்பதற்காக சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி ஓடை வெள்ளத்தில் விழுந்தார். வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட அவரை பொதுமக்கள் மீட்டு உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story