சுங்குவார் சத்திரம் அருகே வேன், கார், லாரி அடுத்தடுத்து மோதல்; 15 பேர் படுகாயம்


சுங்குவார் சத்திரம் அருகே வேன், கார், லாரி அடுத்தடுத்து மோதல்; 15 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 24 Nov 2021 2:53 PM IST (Updated: 24 Nov 2021 2:53 PM IST)
t-max-icont-min-icon

சுங்குவார் சத்திரம் அருகே வேன், கார், லாரி அடுத்தடுத்து மோதிய விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் அடுத்த சேந்தமங்கலம் என்னும் இடத்தில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்கு நேற்று காஞ்சீபுரம் நோக்கி தனியார் கம்பெனி தொழிலாளர்களை ஏற்றி கொண்டு வேன் ஒன்று சென்றது.

அப்போது வேன் திடீர் என பிரேக் போடவே பின்னால் வந்த கார் வேன் மீது மோதியது, காரின் பின்னால் வந்த லாரி கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த சுங்குவார் சத்திரம் போலீசார் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆன்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சுங்குவார் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Next Story