மாவட்ட செய்திகள்

கையை பிளேடால் அறுத்து மாணவி தற்கொலை முயற்சி + "||" + Student attempts suicide by cutting off hand with blade

கையை பிளேடால் அறுத்து மாணவி தற்கொலை முயற்சி

கையை பிளேடால் அறுத்து மாணவி தற்கொலை முயற்சி
கையை பிளேடால் அறுத்து மாணவி தற்கொலை முயற்சி
துடியலூர்,


கோவையை அடுத்த  அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது மாணவி.இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம்வகுப்பு படித்து வருகிறார்.  இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சரவண குமார் (22) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.  

இந்த நிலையில் சரவணக்குமார், திருமண ஆசைக்காட்டி மாணவியை  தனியாக அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். 
இதனை தொடர்ந்து அடிக்கடி மாணவியை மிரட்டி அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். எதையும் யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் மிரட்டி உள்ளார். 


இதனால் மாணவி கடந்த சில நாட்களாக மன வேதனை அடைந்துகாணப்பட்டார்.சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவி அங்குள்ள கழிப்பறைக்குச் சென்று தனது கையை பிளேடால்அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த சக மாணவிகள் உடனே  பள்ளி நிர்வாகத்திடம் கூறினார். 

இதனை தொடர்ந்து மாணவியை மீட்டு அங்குள்ள  தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அப்போது தனது பெற்றோரிடம் அந்த மாணவி, சரவணகுமார் அடிக்கடி தன்னை அழைத்து சென்று மிரட்டி உல்லாசம் அனுபவித்து வந்ததால் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார். 


இதனை கேட்ட அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து  துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் போக்சோசட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவியை மிரட்டி அடிக்கடி கற்பழித்ததாக சரவணக்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.