பட்டதாரிபெண் தூக்குப்போட்டு தற்கொலை
பட்டதாரிபெண் தூக்குப்போட்டு தற்கொலை
இடிகரை
கோவையை அடுத்த இடிகரை ஆப்பிள் கார்டனை சேர்ந்தவர் அம்சபிரியா. தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் கவுசிகா (வயது23).பி.எஸ்சி பட்டதாரி. இவருக்கும் அதே பகுதியில் வசித்து வந்த சரவணபிரசாத் (35) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் கவுசிகாவின் தாய்க்கு தெரியவரவே அவர் தனது மகளை கண்டித்துள்ளார். மேலும் சரவண பிரசாத்துக்கு கவுசிகாவை விட 12 வயது அதிகம் என்பதால், இந்த வயது வித்தி்யாசத்தை காரணம் காட்டி, எதிர்ப்பு தெரிவித்து காதலை கைவிடுமாறு அறிவுறுத்திஉள்ளார்.
இதன் காரணமாக கவுசிகா கடந்த சில நாட்களாகவே மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டுள்ளார். சம்பவத்தன்று அம்சபிரியா வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டு சென்றார். வீட்டில் தனியாக இருந்த கவுசிகா காதலரை திருமணம் செய்து வைக்க மறுத்ததால் வாழ்க்கையில் விரக்தியடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் வழக்கம்போல் அம்சபிரியா காலையில் வேலைக்கு சென்றார்.
பின்னர் மாலையில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவைத் தட்டியும் திறக்கவில்லை. இதனை தொடர்ந்து அம்சபிரியா அக்கம்,பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது கவுசிகா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது கவுசிகா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கைப்பட எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
அதில் 12 வயது வித்தியாசம் உடைய வாலிபரை எனக்கு திருமணம் செய்து வைக்க எனது தாய் மறுத்ததால் தற்கொலை செய்கிறேன் என்று உருக்கமாக குறிப்பிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து போலீசார் கவுசிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story