பட்டா மாறுதல் சிறப்பு முகாம்


பட்டா மாறுதல் சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 24 Nov 2021 8:37 PM IST (Updated: 24 Nov 2021 8:37 PM IST)
t-max-icont-min-icon

நத்தம் அருகே உள்ள சிறுகுடியில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடந்தது.

நத்தம் : 


நத்தம் அருகே உள்ள சிறுகுடியில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடந்தது. இதற்கு தாசில்தார் சுகந்தி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் கோகிலாவாணி வீரராகவன், மண்டல துணை தாசில்தார் மாயழகு, வருவாய் ஆய்வாளர் வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் வரவேற்றார். 

இதில் சுற்றுவட்டார விவசாயிகள் பட்டா மாறுதல், பெயர் மாற்றம், பாதுகாவலரின் பெயர்களில் திருத்தம், நில உரிமையாளரின் உறவுமுறை தொடர்பான திருத்தம், காலியாக உள்ள பத்திகளில் திருத்தம், சிறிய அளவிலான பிழைகள் திருத்தம் செய்வதற்கான மனுக்கள் பெறப்பட்டது. அதில் தகுதியுள்ள மனுக்களுக்கு தீர்வுகள் காணப்பட்டு கணினி முறையில் பட்டா நகல்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. முகாமில் வருவாய்த்துறையினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story