2-வது கள்ளக்காதலனுடன் பெண் ஓட்டம்


2-வது கள்ளக்காதலனுடன் பெண் ஓட்டம்
x
2-வது கள்ளக்காதலனுடன் பெண் ஓட்டம்
தினத்தந்தி 24 Nov 2021 8:44 PM IST (Updated: 24 Nov 2021 8:44 PM IST)
t-max-icont-min-icon

2-வது கள்ளக்காதலனுடன் பெண் ஓட்டம்

கணபதி

கோவை கணபதி பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (என்கிற) சின்னப்பா (வயது 34).தொழிலாளி. இவருக்கும் ராமலட்சுமி  என்ற பெண்ணுக்கும் திருமணமானது. இருவருக்கும் திருமணமான சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். 


இந்த நிலையில் கண்ணனுக்கும், அதே பகுதியை சேர்ந்த 38 வயது பெண் ஒருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. அந்த பெண் ஏற்கனவே திருமணமாகி கணவரைபிரிந்து வாழ்ந்தவர். இதனால் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்துள்ளனர்.  

இதற்கிடையில் அந்த பெண்ணுக்கு கணபதி வி.ஜி.ராவ் பகுதியைச் சேர்ந்த    ஒரு வாலிபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இதை அறிந்த கண்ணன் அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த பெண்ணை கண்டித்துள்ளார். ஆனால் அந்த பெண் அதனைக் கண்டுகொள்ளாமல் 2-வது கள்ளக்காதலனுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.

 இருப்பினும் கண்ணன், அந்த பெண் தன்னை விட்டு செல்ல மாட்டாள். தனக்கு துணையாக இருப்பாள் என்று அந்த பெண் மீது நம்பிக்கையுடன் இருந்துள்ளார்.
இந்த நிலையில்  கடந்த சில நாட்களுக்கு முன்பு, கண்ணன் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தபோது அந்த பெண்ணை காணவில்லை. 

பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவரை பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை. செல்போனில் தொடர்பு கொண்டபோது  சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதன்காரணமாக அந்த பெண் 2-வது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்துள்ளது.

 இதனால் கண்ணன் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டார். இதுகுறித்து கண்ணன் சரவணம்பட்டி போலீசாரிடம் புகார் அளித்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணைதேடி வருகின்றனர். 

Next Story