தனியார் கல்லூரி ஊழியர் தற்கொலை


தனியார் கல்லூரி ஊழியர் தற்கொலை
x
தனியார் கல்லூரி ஊழியர் தற்கொலை
தினத்தந்தி 24 Nov 2021 9:38 PM IST (Updated: 24 Nov 2021 9:38 PM IST)
t-max-icont-min-icon

தனியார் கல்லூரி ஊழியர் தற்கொலை

கோவை

கோவை சின்னியம்பாளையம் நேரு நகரை சேர்ந்தவர் சம்பத் (வயது56). கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இவர் பணியாற்றி வந்த கல்லூரியின் தாளாளர் உடல்நலக்குறைவால் இறந்துபோனார். அவரது இறுதிச்சடங்கில் சம்பத் கலந்துகொணடார்.

 இக்கட்டான சூழ்நிலையில் கல்லூரி தாளாளர் உதவி புரிந்ததாக தெரிகிறது. இதனால் அவரின் இறப்பு சம்பத்துக்கு சோகத்தை ஏற்படுத்தியது. தனது நண்பர்கள், உறவினர்களிடம் இதுகுறித்து கூறி வருத்தம் அடைந்துள்ளார். கடந்த சில நாட்களாக மனஉளைச்சலிலும் இருந்துள்ளார். 

இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story