வால்பாறையில் சாலையோரத்தில் சுற்றுலா மைய படங்களுடன் அறிவிப்பு பலகைகள்


வால்பாறையில் சாலையோரத்தில் சுற்றுலா மைய படங்களுடன் அறிவிப்பு பலகைகள்
x
தினத்தந்தி 24 Nov 2021 9:49 PM IST (Updated: 24 Nov 2021 9:49 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் சாலையோரத்தில் சுற்றுலா மைய படங்களுடன் அறிவிப்பு பலகைகள்

வால்பாறை

வால்பாறையில் சாலையோரத்தில் சுற்றுலா மைய படங்களுடன் அறிவிப்பு பலகைகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டு உள்ளது. 

குளிர் பனிக்காலம் 

மலைப்பிரதேசமான வால்பாறையில் மிகவும் முக்கியமான பருவ காலம் என்றால் அது 4-ம் பருவகாலமான குளிர் பனிக்காலம் தான். தமிழகத்தில் உள்ள ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு ஆகிய கோடைவாசஸ்தலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். 

இதனால் சுற்றுலா பயணிகளின் பார்வை வால்பாறை பக்கம் திரும்பி உள்ளது. இங்கு குளிர் பனிக்காலத்தில் லேசான வெயிலுடன் குளிர் கலந்த காலநிலை நிலவும். அத்துடன் அவ்வப்போது லேசான மழை சாரலும் இருக்கும். 

அறிவிப்பு பலகை 

இங்கு பெரிய அளவில் சுற்றுலா மையங்கள் இல்லாவிட்டாலும் இங்கு நிலவி வரும் இதமான காலநிலை, மாசு இல்லாத சுத்த மான காற்று, இயற்கை எழில் கொஞ்சும் பகுதி சுற்றுலா பயணி களை வெகுவாக கவர்ந்து இழுத்து வருகிறது. இதனால் வால் பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

எனவே இங்குள்ள சுற்றுலா மையங்களை சுற்றுலா பயணிகள் தெரிந்து கொள்ளும் வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோரத்தில் சுற்றுலா மைய புகைப்படங்களுடன் கூடிய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. 

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- 

வருகை அதிகரிப்பு 

வால்பாறையில் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கோடைக்காலமும், ஜூன் முதல் நவம்பர் வரை தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை காலமும் இருக்கும். எனவே இந்த நேரத்தில் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். 

ஆனால் அனைத்து தரப்பு மக்களும் வரக்கூடிய காலமாக தற் போது உள்ள குளிர் பனிக்காலம் இருந்து வருகிறது. இதனால் கடந்த 20 ஆண்டுகளைவிட தற்போது வரும் சுற்றுலா பயணி களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

உரிய நடவடிக்கை 

இதனால் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வால்பாறையில் உள்ள சுற்றுலா மையங்கள் குறித்த அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. இதற்காக ஆழியாறு வனத்துறையின் சோதனை சாவடி யில் இருந்து சோலையாறு அணை பகுதி வரை சாலைகளை அகலப்படுத்தி உள்ளனர். 

அத்துடன் சாலையோரத்தில் சோலையாறு அணை, பாலாஜி கோவில், நகராட்சி படகு இல்லம் ஆகியவற்றின் படங்களை அறிவிப்பு பலகைகளாக வைக்கப்பட்டு உள்ளது. இது சுற்றுலா பயணிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. மேலும் இங்கு சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கும் வகையில் சுற்றுலா மையங்களை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story