மீனாட்சி அம்மன் கோவிலில் ரூ.63 லட்சம் உண்டியல் காணிக்கை


மீனாட்சி அம்மன் கோவிலில் ரூ.63 லட்சம் உண்டியல் காணிக்கை
x
தினத்தந்தி 24 Nov 2021 8:23 PM GMT (Updated: 24 Nov 2021 8:23 PM GMT)

மீனாட்சி அம்மன் கோவிலில் ரூ.63 லட்சம் உண்டியல் காணிக்கை

மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மற்றும் அதனை சார்ந்த உபகோவில்களில் உள்ள உண்டியல்கள் ஒவ்வொரு மாதமும் திறந்து எண்ணப்படும். அதன்படி மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதனை சார்ந்த 10 உபகோவில்களில் உள்ள உண்டியல்கள் நேற்று காலை திறக்கப்பட்டன. அதில் பெறப்பட்ட காணிக்கைகளை மீனாட்சி அம்மன் கோவில் பழைய கல்யாண மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது. முடிவில் அதில் 63 லட்சத்து 17 ஆயிரத்து 405 ரூபாயும், 675 கிராம் தங்கமும், 580 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைக்கப் பெற்றன. கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை தலைமையில் நடந்த இந்த பணியில் உதவி கமிஷனர்கள், கோவில் பணியாளர்கள், வங்கி அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Next Story